/* */

World Cup Cricket India-England at Lucknow உலகக்கோப்பை கிரிக்கெட்- இன்று இந்தியா-இங்கிலாந்து மோதல்

World Cup Cricket India-England at Lucknow உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 6 வது போட்டியாக இந்தியா இங்கிலாந்தை எதிர்க்கொள்கிறது. இந்த போட்டி லக்னோவில் மதியம் 2மணிக்கு துவங்குகிறது.

HIGHLIGHTS

World Cup Cricket India-England at Lucknow  உலகக்கோப்பை கிரிக்கெட்- இன்று   இந்தியா-இங்கிலாந்து மோதல்
X

இன்றைய போட்டியில்   விராட் கோலி  சாதனை படைப்பாரா?  (கோப்பு படம்)

World Cup Cricket India-England at Lucknow

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை விளையாடிய அத்தனை போட்டிகளிலும் அதாவது 5 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இன்று மதியம் 2 மணியளவில் லக்னோவில் நடக்க உள்ள போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில் அது 6 வது வெற்றியாகும். வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிடும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்தியாவில் 13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு அணியும் 10 அணிகளோடு லீக் போட்டிகளில் மோதுகின்றன. இன்று லக்னோவில் நடக்க உள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் இந்தியா மோதுகிறது.

தனது முதல் 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றுவிட்டால் உலகக்கோப்பை அணிகளிலேயே அரையிறுதிக்கு செல்லும் முதல் அணியாக இந்தியா பெயர் பெறும் .

World Cup Cricket India-England at Lucknow



இந்திய அணியின் பேட்டிங்கில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவோடு சுப்மன்கில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜோடி நல்ல ஸ்ட்ராங்கான துவகத்தினைத் தந்து வருகிறது. இன்றும்இதேபோல் அமைந்தால் அதிக ரன்களை எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிரடிவீரர் விராத் கோலி பல போட்டிகளில் நிதானமாக நின்று விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நன்கு பொறுப்பாக இதுவரை விளையாடியுள்ளார். இன்று விராட் கோலி சதமடிக்கும் பட்சத்தில் சச்சினின் சாதனையான (49) செஞ்சுரியை சமன் செய்யலாம். அதோபோல் அதற்கு பிறகு களமிறங்கும் ஷ்ரேயாஸ் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் சற்று நிதானமாக விளையாடி அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. அவரது இடத்திற்கு சூர்ய குமார் களமிறங்கி நிதானமாக விளையாடி இன்று அதிக ரன்கள் குவிக்க வேண்டும். ஷர்துல் உட்பட 5 பவுலர்கள் களம் இறங்குகின்றனர். அவர்களோடு ஜடேஜாவும் களம் இறங்குகிறார்.

லக்னோ ஆடுகளம் சுழலுக்கு சாதகமானது என்பதால் அஷ்வின் இன்று இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முகமது ஷமி, மற்றும் சிராஜ் ஆகியோரில் யார் களம் இறங்க உள்ளனர் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

World Cup Cricket India-England at Lucknow


இங்கிலாந்து அணியைப்பொறுத்தவரை வீரர்கள் பார்மில் இல்லாவிட்டாலும் இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டும் என எதிர்பார்த்து களம் இறங்குவார்கள் என தெரிகிறது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் அடில் ரஷித், மொயீன்அலி இந்திய வீரர்களுக்கு தொல்லை தரலாம் .இருந்தாலும் இந்திய வீரர்கள் எந்த பந்தையும் எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதால் சற்று பொறுத்து நிதானத்துடன் விளையாடி இன்று 6 வது வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இதுவரை இந்தியா-இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பையில் 8முறை மோதியதில் இந்தியா 3 வெற்றியையும், இங்கிலாந்து 4 வெற்றிகளையும் பெற்றுள்ளது. கடந்த 2011ல் நடந்த போட்டி டையிலும் முடிந்து போனது.

லக்னோவில் தட்பவெப்பநிலை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் போட்டி நேரத்தில் மழை வர வாய்ப்பு குறைவு என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 30 Oct 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க