AI Technology in Marriage -திருமணத்தில் கூட AI தொழில்நுட்பம்..! அப்போ செலவு மிச்சமா..?

AI Technology in Marriage -திருமணத்தில் கூட AI தொழில்நுட்பம்..! அப்போ செலவு மிச்சமா..?
X

AI technology in marriage- திருமணங்களில் பயன்படும் AI தொழில்நுட்பம்.(கோப்பு படம்)

இந்தியாவில் மிகப்பெரிய திருமணச் சீசன் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

AI Technology in Marriage

நாடு முழுவதும் சுமார் 38 லட்சம் திருமணங்கள் இந்தியா முழுவதும் நடைபெறும் வேளையில், இதன் மூலம் சுமார் ரூ.4.74 லட்சம் கோடி பிஸ்னஸ் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் யாருமே சொல்லாத விஷயம் ஏஐ. அனைத்து துறையிலும், அனைத்து சேவைகளிலும் ஏஐ பயன்பாடு வந்திருக்கும் வேளையில், இந்தியாவின் 8 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் திருமணங்கள் வர்த்தகத்தில் ஏஐ வராமல் இருக்குமா என்ன..?

இந்த வருடம் நடந்த பெரும்பாலான திருமணத்தில் ஏதாவது ஒரு வகையில் ஏஐ பயன்படுத்தப்பட்டு உள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்தியர்களின் பாரம்பரியமான திருமணத்தில் ஏஐ எப்படியெல்லாம் புகுந்துள்ளது என ஜாலியாக ஒரு ரவுண்ட் போய்ப் பார்க்கலாம் வாங்க.

AI Technology in Marriage

திருமணத் திட்டமிடல்: திருணத்தின் மேடை அலங்காரம், முதல் வாசலில் போடப்படும் கோலம் வரையில் ஏஜ கொண்டு டிசைன் செய்யப்பட்டு வருகிறது. இதேவேளையில் இன்று பல இளம் தலைமுறையினர் wedding planning வர்த்தகத்திற்கு வரும் காரணத்தால் ஏஐ வேகமாக இந்தியர்களின் திருமணத்திற்கு வருகிறது.

பட்ஜெட் திட்டமிடல்: ஒரு நாட்டின் பட்ஜெட்டை கூடப் போட்டு விடலாம் திருமணத்தின் பட்ஜெட்-ஐ மட்டும் சரியாகப் போட முடியாது. எப்படிக் கணக்குப் போட்டாலும் கூடுதலாகத் தான் வரும். தற்போது பல wedding planning தளத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போட்டோகிராபி முதல் சமையல் காரர்கள் வரையில் இடத்தையும், பட்ஜெட்-ஐயும் கொடுத்து விட்டால் போதும், விலையை ஒப்பிட்டுச் சிறப்பான நபர்களைத் தேர்வு செய்ய வழி வகுக்கிறது.

கேட்டரிங்க்: ஏஐ பயன்படுத்திச் சமையலே செய்யப்படும் வேளையில், தற்போது ஏஐ வைத்துக் குறிப்பிட்ட பட்ஜெட்டில் மெனு தயாரிக்கும் முயற்சியில் பலர் இறங்கியுள்ளனர்.

AI, AR, VR : இந்திய திருமணங்களில் போட்டோ வீடியோகிராபி மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில் தற்போது அடுத்த கட்டமாக AI, AR, VR தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பத்திரிக்கை: சந்தையில் இருக்கும் திருமணப் பத்திரிக்கை டிசைன்களைப் படிக்காத பலர் எப்போது ஏஐ பயன்படுத்தித் தாங்களாகவே தங்களுக்குப் பிடித்தமான டிசைனில் பத்திரிக்கை அடிப்பது வழக்கமாகியுள்ளது. இதன் மூலம் பணத்தைச் சேமிக்கவும் முடியும், பணத்தை அதிகமாகச் செலவு செய்ய முடியும். ஆடைகள்: தற்போது ஆடைகளில் மணமக்கள் முகங்களைப் பிரிண்ட் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

AI Technology in Marriage

முன்பெல்லாம் பட்டுச்சேலைகளில் விருப்பப்பட்டவர்களின் முகங்களை நெய்யப்படுவது வழக்கம். இப்போது ஏஐ பிரிண்டிங் மூலம் இது நடக்கிறது. விர்ச்சுவல் திருமணம்: திருமணத்தை லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுவது தற்போது புதிய டிரெண்டாகியுள்ளது. இதேபோல் இந்த லைவ் டெலிகாஸ்ட்டில் மொய் வைக்க மணமக்களின் QR கோடு வைக்கப்படுகிறது.

UPI-யில் மொய் வாங்குவதெல்லாம் அந்தகாலம் பாஸ், அப்போது விர்சுவலில் திருமணத்தை பார்த்துவிட்டு, விர்ச்சுவலாகவே மொய் வைத்துவிட்டு பல ஆயிரம் பயண செலவு குறைக்க சிறப்பான வழியாக இதை பலரும் நினைக்கிறார்கள். 1000 ரூபாய் மொய் வைக்க 2 நாள் லீவு, 5000 ரூபாய் பயண செலவு எல்லாம் மிச்சமாகும்.

ஏஐ போட்டோ:

இதேபோல் திருமணத்தில் எடுக்கப்படும் போட்டோ சிலருக்கு மிகவும் படித்து விடும், அவற்றைக் கேட்டு வாங்க கூச்சமாக இருக்கும். ஆனால் இப்போது அந்தத் தொல்லை இல்லை, போட்டோகிராபி நிறுவனம் தாங்கள் எடுக்கும் அனைத்து புகைப்படத்தையும் ஒரு டிரைவில் வைத்துள்ளது. இதேபோல் ஒரு இணையத் தளத்தைக் கொடுத்து அதில் பெயர், வாட்ஸ்அப் நம்பர் உடன் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும்.

AI Technology in Marriage

அப்படி அனுப்பிவிட்டால் அடுத்த 30 நிமிடத்தில் இந்தத் திருமணத்தில் உங்கள் முகம் எந்தப் போட்டோவில் எல்லாம் உள்ளதோ அதை AI மூலம் கண்டுபிடித்து அட்டோமோட்டிக்காக உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்படும். இப்படிப் பந்தக்கால் நடுதலிலிருந்து கல்யாணம் முடித்து ஹனிமூன்-க்கு செல்வது வரையில் அனைத்திலும் தற்போது ஏஐ சேவை வந்துள்ளது.

ஆனால் இவை அனைத்திற்கும் முன் வைக்கப்படும் ஓரே கேள்வி ப்ரைவசி பாதிக்காதா என்பது தான். இதையெல்லாம் பார்த்தால் கோமாளி படத்தில் என்னடா பண்ணி வைச்சுயிருக்கீங்க என்ன கேட்ட சிலருக்கு தோன்றலாம், சிலருக்கு பாறேன் எவ்வளவு வசதிகள் வந்திருக்குன்னு கேட்கத் தோன்றும்.

Tags

Next Story