Brunei Sultan Hassanal Bolkiah-604 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்..! ரூ.4 ஆயிரம் கோடி..! யாருங்க அவரு?

brunei sultan hassanal bolkiah-புருணை சுல்தான் அவரது குடும்பத்துடன் (கோப்பு படம்)
Brunei Sultan Hassanal Bolkiah
ஒரு கார் வாங்குவதற்கே நாம இந்தியாவில் பலர் படாதபாடு பட்டு வருகிறோம். ஆனால் ஒருவர் ரூ.4,000 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மட்டுமே வாங்கி வைத்துக்கொண்டு அழகு பார்த்து வருகிறார். நாம சொல்லி இருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ் மட்டும்.
Brunei Sultan Hassanal Bolkiah
இவர் வைத்திருக்கும் மற்ற கார்களின் எண்ணிக்கை தனி. அவரு யாரா இருக்கும் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. ஆனால் அவரு நம்ம ஊரு காரர் இல்லைங்க. அவரு பல ஆயிரம் கோடிகளில் புரளும் ஒரு மன்னர். ஆமாம் புருனே நாட்டின் மன்னர் ஹசனல் போல்கியா தான் நாம பேசிக்கொண்டிருக்கும் கார்காரர்.
1967ல் புருனே மன்னராக ஹசனல் போல்கியா பொறுப்பேற்றார். 1984ல் இங்கிலாந்திடம் இருந்து புருனே விடுதலை பெற்று சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் அடைந்த அந்த நாள் முதல் அந்நாட்டின் மன்னர் மற்றும் பிரதமர் எல்லாமே நம்ம போல்கியா தான். அந்நாட்டில் நாடாளுமன்றம் இருந்தாலும் மன்னராட்சிதான் நடைபெறுகிறது.
Brunei Sultan Hassanal Bolkiah
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பிறகு வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் இவர்தான். மேலும் ஆடம்பர வாழ்வில் திளைக்கும் அவர் உலகின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரும் கூட.
புருனே நாட்டின் சுல்தான் போல்கியா மிகப்பெரிய கார் பிரியர். சந்தைக்கு புதிதாக எந்த சொகுசு கார் வந்தாலும் உடனே வாங்கி விடுவார். அதிகமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர் என்ற முறையில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இவரிடம் தற்சமயம் 604 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.4,000 கோடியாகும். அவரிடம் மற்ற கார்கள் என மொத்தம் 7 ஆயிரம் கார்களுக்கும் மேலாக இருப்பதாக கூறுகிறார்கள்.
Brunei Sultan Hassanal Bolkiah
1990களில் நடுப்பகுதியில் வாங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி கார்களில் கிட்டத்தட்ட பாதி சுல்தானுக்கும் அவரது குடும்பத்தினருக்கு சென்றது. ஹசனல் போல்கியா வசிக்கும் இஸ்தானா நூருல் இமான் அரண்மனையும் சாதாரண அரண்மனை கிடையாது. அந்த அரண்மனை 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய அரண்மனையாகும்.
ரூ.2,550 கோடி மதிப்பிலான 22 காரட் தங்கத்தில் அரண்மனையின் குவிமாடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ரூ.92 கோடி மதிப்பிலான வைரங்கள் உள்ளன. புருனே சுல்தானுக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்களும், 7 மகன்களும், 18 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu