/* */

பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளன.

HIGHLIGHTS

பரீட்சையில் Fail ஆகிட்டா,   தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
X

தோல்விகளே வெற்றிக்கான சிறந்த படிகள்.

தேர்வு முடிவுகளை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தை விட தற்போதய சூழல்களில் மாணவ, மாணவிகள் மிகவும் தைரியமாக எதிர்கொண்டு வருகின்றனர். இது தமிழக சமூகம் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. நீட் தேர்வையே அசால்ட்டாக கையாளும் அளவுக்கு தமிழக மாணவ, மாணவிகள ்திறன் பெற்றுள்ளனர்.

இருப்பினும் தேர்வு முடிவு என்பது ஏதோ ஒரு வெற்றியின் தொடக்கம். வெளிப்படையான வெற்றி ஒரு வகையான பாதை என்றால், தோல்வி அதனை விட சிறந்த பாதையாகவும் இருக்கும் எனவும் மனோதத்துவ டாக்டர்கள் கூறி வருகின்றனர்.

தேனி டாக்டர்கள் கருத்துப்படி :

பால் கொஞ்சம் தவறு செய்தால் அது தயிராகும். பாலை விட தயிருக்கு மதிப்பு அதிகம். தயிரை கடைந்தெடுத்தால், அது வெண்ணையாக மாறும். தயிர் மற்றும் பால் இரண்டையும் விட வெண்ணை மிகவும் மதிப்பு வாய்ந்தது. வெண்ணெயை உருக்கினால், சூடுபடுத்தினால் நெய்யாகிறது. எல்லாவற்றையும் விட நெய்க்கு மதிப்பு மிக அதிகம். சாதாரணமாக இருந்த பாலின் நீண்ட போராட்டமும், சவால்களும், அழுத்தமும் அதை மதிப்புமிக்க நெய்யாக மாற்றுகிறது.


திராட்சை ஜூஸ் கம்மி விலைதான். ஆனால் திராட்சை ஜூஸ் புளிப்பாக மாறினால், அது திராட்சை ஜூஸை விட அதிக விலை கொண்ட ஒயினாக மாறுகிறது. நீங்கள் தவறு செய்ததால் நீங்கள் மோசமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. தவறுகள் உங்களை மிகவும் மதிப்புமிக்க மனிதனாக மாற்றும் அனுபவங்கள்.

கொலம்பஸ் ஒரு பயண பிழையை செய்தார், வழி தவறினார். ஆனால் அது அவரை அமெரிக்காவைக் கண்டுபிடிக்கச் செய்தது. அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கின் தவறு அவரை பென்சிலின் கண்டுபிடிக்க வழிவகுத்தது. உங்கள் தவறுகள் உங்களை வீழ்த்த மட்டும் விடாதீர்கள். அந்த தவறுகள் உங்களை செம்மைப்படுத்தும். எந்த திசை, எந்த திட்டம், எந்த செயல்முறை என்பதை உங்கள் தவறுகள் உங்களுக்கு அடையாளம் காட்டும். தவறுகளில் இருந்து என்ன நாம் கற்கிறோமோ அதுவே சரியானவை. அதனால் தேர்வில் பெயில் ஆயிட்டா... தோத்துட்டோம்னு அர்த்தமில்லை. மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்று அர்த்தம். இவ்வாறு கூறினர்.

Updated On: 10 May 2024 5:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...