/* */

ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்

ஷீரடி சாய்பாபாவின்வாழ்க்கைக்கு உகந்த பொன்மொழிகளை உங்களுக்காக இந்த பதிவில் தந்துள்ளோம்

HIGHLIGHTS

ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
X

சாய் பாபாவின் பொன்மொழிகள் 

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்ந்த ஆன்மீக குருவும், இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் போற்றப்படும் புனிதத் துறவியுமான சாய் பாபா (Sai Baba) சிவ பக்தர்களின் புதல்வராக பிறந்தார். தீவிர சிவ பக்தர்களான தாய் தந்தையருக்கு இவர் பிறந்திருந்தாலும், இவர் முஸ்லிம் பக்கீர் ஒருவராலேயே வளர்க்கப்பட்டார். அதனாலேயே இரு மதத்தாரும் இவரைப் போற்றி வணங்குகின்றனர்.

சாய் பாபா தான் வாழ்ந்த காலத்தில் பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் பல்வேறு செயல்கள் மூலம் இந்து மற்றும் முஸ்லிம் மத இணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இவர் சமாதி அடைந்த இடமான சீரடி தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

அவர் கூறிய வாழ்க்கைக்கு உகந்த பொன்மொழிகளை உங்களுக்காக இதோ தந்துள்ளோம். வாசித்து பயனுறுங்கள்.

  • ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே, நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்
  • உனக்கென படைக்கப்பட்ட அனைத்தும் நிச்சயமாக உன்னை வந்தடையும்.
  • உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது..
  • நம் வார்த்தையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகிறது என்றால் அதுகூட நாம் செய்யும் தர்மம்தான்.
  • என் வார்த்தைகளில் நம்பிக்கை வை. எதை நீ தேடினாயோ, அது உன்னைத் தேடி வரும்.
  • நீ செல்லும் இடமெல்லாம் சாய் துணையாக இருக்கிறேன். நல்லதே நடக்கும்.
  • அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட, யாரையும் அறியாமல் காயப்படுத்தி விடக் கூடாது என்ற நோக்கமே சிறந்தது.

  • சங்கடங்களை நினைத்து சந்தோஷத்தை தொலைக்காதே. அனுதினமும் வணங்கும் கடவுள் நான் இருக்கிறேன். அனைத்திலும் இருந்து நான் உன்னை காப்பேன்.
  • உன் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் உன்னை. ஒருபோதும் கைவிடாது உன்னுடன் இருந்து வாழ வைக்கும்.
  • மனிதர்கள் உன்னை தனித்து விடும் போது உடைந்த போகாதே. நீ நினைக்காத இடத்திலிருந்து நான் உனக்கு உதவிகளைக் கொண்டு வருவேன்.
  • வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும். அதை பலமாக பயன்படுத்திக் கொள்வது நமது பொறுப்பாகும்.
  • பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்.
  • இறைவன் சிலவற்றை காலம் கடந்து கொடுத்தாலும் காலத்தால் அழிக்க முடியாததாக கொடுப்பார். சோர்ந்து போகாதீர்கள்.
  • உனது வெற்றியைத் தேடுவதை விட மகிழ்ச்சியை வாழ்வில் தேடிப்பார் வெற்றி உன்னைத் தேடி வரும்.
  • நான் உன்னைப் பாதுகாப்பேன். உன் மீது அன்பாக இருக்கிறேன். என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. உன்னை எந்தத் தீங்கும் செய்யவிடமாட்டேன்.
  • கடவுள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து உங்களை ஒன்றுமில்லாதவராக்கினால், வருத்தப்படாதீர்கள். ஏனெனில் கடவுள் உங்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுக்கப் போகிறார். மேலும் அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தொடங்குவார்.

  • எல்லாச் செயல்களையும் இறைவனின் செயல்களாகப் பார்த்தால், நாம் பற்றற்றவர்களாகவும், கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டவர்களாகவும் இருப்போம்.
  • பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை.
  • ஒருவரையொருவர் நேசியுங்கள், அன்பைப் பொழிவதன் மூலம் மற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு உயர உதவுங்கள்.
  • அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்.
  • அறிவை ஞானமாக மாற்றி, ஞானம் குணத்தில் வெளிப்பட்டாலன்றி, கல்வி என்பது ஒரு வீணான செயலாகும்.
  • எந்தவொரு மகிழ்ச்சியும் மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது.
  • தன்னலமற்ற சேவை மட்டுமே ஒருவரின் இதயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதநேயத்தை எழுப்புவதற்கு தேவையான வலிமையையும் தைரியத்தையும் தருகிறது.
  • இன்றைய கல்வியானது, அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையோ, மனஉறுதியையோ மாணவர்களுக்கு வழங்கவில்லை. கல்வித் துறை அறியாமையின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது.
  • நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம்.
Updated On: 7 May 2024 1:52 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...