/* */

2023 ஃபிளாஷ்பேக்: தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றிய தொகுப்பு'

HIGHLIGHTS

2023 ஃபிளாஷ்பேக்: தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
X

ஜனவரி

ஜன.12: சேதுசமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம்.

ஜன.13: அரசு பணியில் சேர தமிழ் கட்டாயம் என்று தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

ஜன.13: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி ஆதம்பாஷா கைது.

ஜன.17: பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 5 பேர் பலி.

ஜன.25: தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை விதித்த அரசின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பிப்ரவரி

பிப்.11: தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் பிப்.18-ல் கவர்னராக பதவியேற்றார்.

பிப்.13: உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்ததால் பரபரப்பு நிலவியது.

மார்ச்

மார்ச்.3: விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 100 யூனிட் ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

மார்ச்.5: கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மார்ச்.8: திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மார்ச்.17: தமிழக காவல்துறையின் பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு (50 ஆண்டு) கொண்டாட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பெண் காவலர்களுக்கு விடுமுறை, விருது, விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

மார்ச்.22: தமிழக பாம்புபிடி வீரர்கள் உள்பட 54 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

மார்ச்.24: நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என பெயர் சூட்டி, பெயர் பலகையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஏப்ரல்

ஏப்.6: கீழடி உள்ளிட்ட 5 இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஏப்.14: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தான் கூறியபடி ஏப்.14-ல் தி.வினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டு பட்டியலை வெளியிட்டார்.

ஏப்.16: வீரப்பன் கூட்டாளி, மாதையன் பெங்களூரு ஆஸ்பத்திரியில் இறந்தார்.

ஏப்.25: குட்கா, புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது செல்லும் என்றும், தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மே

மே.18: தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

ஜூன்

ஜூன்.2: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற 9 பேர் குழு அமைக்கப்பட்டது.

ஜூன்.9: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியை தொடங்கியது இஸ்ரோ.

ஜூன்.13: மாநில தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டார்.

ஜூன்.22: முன்னாள் தலைமை செயலாளா் சபாநாயகம் மரணம்.

ஜூன்.23: சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு.

ஜூன்.30: தமிழகத்தின் தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார். புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவாலும், சென்னையின் புதிய கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோரும் நியமனம்.

ஜூலை

ஜூலை.6: தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. அரசு இடத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை.

ஜூலை.7: கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

ஜூலை.16: சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு.

ஜூலை.22: முதியோர் ஓய்வூதிய தொகையை மாதம் ரூ.1,000-த்தில் இருந்து, 1,200 ஆக உயர்த்தி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அரசு அறிவித்தது.

ஜூலை.26: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் தி. பைல்ஸ்-2 என்ற பெயரில் தி. ஊழல் பட்டியலை கவர்னரிடம் வழங்கினார். இதில் இருந்து ரூ.5 ஆயிரத்து 600 கோடிக்கான ஊழல் பட்டியல் வெளியானது.

ஜூலை.27: மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மூங்கில் யானை கூட்ட சிலைகள் வைக்கப்பட்டன.

ஜூலை.28: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 2023-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது ஆசிய செஸ் கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டது. அந்த விருதை செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் வந்து ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.

ஆகஸ்டு

ஆக.5: 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு. அவர் முதல் நாளில் முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்டார். 2-ம் நாள் பயணத்தில் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். 3-ம் நாளில் சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயர்சூட்டி கல்வெட்டை திறந்துவைத்தார்.

ஆக.15: சுதந்திர தின விழாவையொட்டி எவரெஸ்டில் ஏறிய தமிழக பெண்ணான முத்தமிழ் செல்விக்கு கல்பனா சாவ்லா விருது, கீ.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

ஆக.16: டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் ரூ.50 லட்சத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவரது முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ஆக.22: டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்து கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

செப்டம்பர்

செப்.6: முறைகேடு வழக்கில் விடுதலையான அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செப் 23: உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

செப் 24: நெல்லை- எழும்பூர் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அக்டோபர்

அக்.5: வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி கவர்னர் மாளிகையில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. அதை கவர்னர் திறந்துவைத்தார்.

அக்.9: அரியலூர் அருகே விரகாலூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் பலி.

அக்.11: மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக் கும் வரியை உயர்த்தி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

அக்.14: தி. சார்பில் சென்னையில் தி. மகளிர் உரிமை மாநாடு நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

அக்.14: 40 ஆண்டுகளுக்கு பிறகு நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியது. 50 பயணிகளுடன் கப்பல் புறப்பட்டு சென்றது. பிரதமர் மோடி இதை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

அக்.15: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாமிற்கு முழு உருவ சிலை நிறுவப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நவம்பர்

நவ.3: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. 3-வதுநாள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

நவ. 7: அ.தி. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நவ 9: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

நவ.16: ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கையை பெங்களூரு நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சமர்ப்பித்தனர். 1380 ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

நவ.19: தமிழகம் முழுவதும் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

நவ.20: பாடகி பி.சுசீலாவுக்கு கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

நவ.22: திருச்சி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற, ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நவ.23: உங்களைத் தேடி உங்கள் ஊரில் புதிய திட்டம் அறிமுகம். ஒவ்வொரு மாதமும் கிராமங்களில் கலெக்டர்கள் தங்கி மக்கள் குறை கேட்க வேண்டும்.

நவ.23: தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி (வயது 96) மரணம்.

டிசம்பர்

டிச.1: கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அயோத்தி தாசருக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது.

டிச.5: அ.தி.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

டிச.18: 30 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணும் 'மக்களுடன் முதல்வர்' புதிய திட்டத்தை கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

டிச. 28: தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

.

Updated On: 2 Jan 2024 7:46 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்