/* */

ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி

ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றகரையோரம், ஆடு மேய்த்து கொண்டுடிருந்த மூதாட்டியை முதலை கடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
X

கொள்ளிடம் கரையோரம் திரியும் முதலை. (உள்படம் - முதலை தாக்கி காயமடைந்த மூதாட்டி)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம், ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை அப்பகுதியில் இருந்த முதலைக் கடித்ததில் பலத்த காயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் உள்ளது. இங்குள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் பெரும்பாலான மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். அந்தவகையில், அப்பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா(70) என்பவர் நேற்று (சனிக்கிழமை) மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது, ஆற்றில் கரையோரம் இளைப்பாறுவதற்காக வந்து புதருக்குள் படுத்திருந்த இருந்த முதலை, திடீரென சீறிப் பாய்ந்து இந்த மூதாட்டியின் காலை கடித்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலை கடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 April 2024 9:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...