C.M.Stalin Today Madurai Trip பசும்பொன் தேவர் ஜெயந்தியில் பங்கேற்க தமிழக முதல்வர் இன்று மதுரை பயணம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்)
C.M.Stalin Today Madurai Trip
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு விமானம் மூலமாக மதுரை செல்கிறார்.இதனால் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரவு 7மணிக்கு மதுரை வந்தடையும் முதல்வரை வரவேற்க அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் விமானநிலையத்திற்கு வருகின்றனர். அவர்களைச் சந்தித்துவிட்டு முதல்வர் சர்க்யூட் ஹவுசில் தங்குகிறார்.நாளை திங்களன்று காலை 7.30 மணியளவில் மதுரை கோரிப்பாளையத்திலுள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். பின் கோரிப்பாளையம் மேலமடை மேம்பால பணிகளைத் துவக்கி வைத்துவிட்டு பசும்பொன்னுக்கு செல்கிறார். அங்கு காலை 9மணிக்கு மரியாதை செலுத்துகிறார்.
அங்கிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு மதுரை ரிங் ரோட்டிலுள்ள ஓட்டல் அமிகாவிற்கு வரும் முதல்வர் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மதியம் 12.30 மணியளவில் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.
முதல்வர் வருகை 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை காலை 9மணிக்கு மரியாதை செய்கிறார்.
தேவர் ஜெயந்தியையொட்டி இன்றும்நாளையும் டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் 10 ஆயிரம்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நாளை காலை 9மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதன்பின்னர் அதிமுக சார்பில் இபிஎஸ் தலைமையில் மரியாதை செய்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மரியாதை செய்ய போலீசார் நேரம் ஒதுக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu