/* */

துடியலூர் அருகே ரயில்வே கேட்டில் மோதிய லாரி, ரயில்கள் தாமதம்

உருமாண்டம்பாளையம் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தநிலையில் எதிர்பாராதவிதமாக லாரி கேட்டின் மீது மோதியது.

HIGHLIGHTS

துடியலூர் அருகே ரயில்வே கேட்டில் மோதிய லாரி, ரயில்கள் தாமதம்
X

லாரி மோதிய ரயில்வே கேட் பகுதியில் மெதுவாக இயக்கப்பட்ட ரயில் 

கோவை-மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் துடியலூர் வெள்ளகிணர் பிரிவில் இருந்து உருமாண்டம்பாளையம் செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது.

இந்த வழியாக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு உருமாண்டம்பாளையம் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சரவணம்பட்டிக்கு ஒரு லாரி வந்தது. லாரி, வெள்ளக்கிணறு ரயில்வே கேட்டை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கேட்டின் மீது மோதியது.

இதில் ரயில்வே கேட்டின் சிக்னல் கம்பம் உடைந்தது, அத்துடன் ரயில்வே கேட்டும் பாதி உடைந்து, அதில் இருந்து தீப்பொறிகள் கிளம்பியது. இதை பார்த்த அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அந்த கேட்டுக்கான அனைத்து லைன்களையும் துண்டித்தனர். மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் ரயில் புறப்பட தயாராகி இருந்தது.

ரயில்வே கேட் உடைந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதால், உடனடியாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து தற்காலிகமாக உடைந்த ரயில்வே கேட் பகுதியில் உடைந்த கம்பங்களை எடுத்து வைத்து வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்துவிடாத வண்ணம் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

அதன்பிறகு அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, ரயிலை இயக்கி வரும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயில் புறப்பட்டு கோவை வந்தது. சம்பவ இடமான வெள்ளக்கிணர் பிரிவின் அருகே வந்த போது ரயிலை மெதுவாக இயக்கினர். இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் புறப்பட்டு சென்றது.

2 ரயில்களும் சென்ற பிறகு, ரயில்வே ஊழியர்கள் உடைந்த ரயில்வே கேட் மற்றும் சிக்னல் கம்பத்தை சரி செய்யும் பணியை தொடங்கினர். இரவோடு, இரவாக பணிகளை துரிதப்படுத்தி, ரயில்வே கேட் மற்றும் சிக்னல் கம்பம் சரி செய்யப்பட்டது.

ரயில்வே கேட் மீது லாரி மோதிய விவகாரத்தில் லாரி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Updated On: 1 Nov 2023 2:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...