/* */

கோவை - மேட்டுப்பாளையம் ரயில் கட்டணம் குறைப்பு ; பயணிகள் மகிழ்ச்சி

குறைந்த கட்டணத்தில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவை - மேட்டுப்பாளையம் ரயில் கட்டணம் குறைப்பு ; பயணிகள் மகிழ்ச்சி
X

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்

கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பஸ், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பயணிகள் பாசஞ்சர் ரயில்கள் விரைவு ரயிலாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 ல் இருந்து ரூபாய் 30 ஆக அதிகரிக்கப்பட்டது.

கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரும் கட்டணம் குறைக்கப்படவில்லை. இதனால் ரயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் இந்த கட்டணத்தை குறைத்து மீண்டும் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைவாக செல்லும் பாசஞ்சர் ரயில்களின் இந்த கட்டணம் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது.

கொரோனா காலக் கட்டத்திற்கு முன்பு இருந்ததைப் போன்று பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், ஈரோடு, பொள்ளாச்சி, பாலக்காடு, பழனி, கண்ணனூர், உள்ளிட்ட இடங்களுக்கு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதில் கோவை மேட்டுப்பாளையம் பாஸஞ்சரில் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் இடையே எங்கு ஏரி இறங்கினாலும் ரூபாய் பத்து மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு காலை ஐந்தே கால் மணிக்கு மற்றும் மாலை 6:45 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Updated On: 28 Feb 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்