/* */

கோவையில் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி போராட்டம்

HIGHLIGHTS

கோவையில் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
X

கோவை மருத்துவமனையில் சுகாதார பணியாளர்கள் போராட்டம் 

கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங்பவுடர் போன்ற தூய்மை பொருட்களால் அடிக்கடி தூய்மை பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார். எனினும் தொடர்ச்சியாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தூய்மை பணிகளுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடும் தங்களை இதுவரை மருத்துவமனை நிர்வாகம், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்தனர். போராட்டம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Feb 2024 6:59 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி