/* */

கோவை - அவிநாசி சாலையில் இடிக்கப்படும் நடைபாதை மேம்பாலம் ; கடும் போக்குவரத்து நெரிசல்

கல்லூரியையும், கல்லூரி விடுதியை இணைக்கும் நடைபாதை பாலமும் இந்த வாரத்திற்குள் இடிக்கப்பட இருக்கிறது.

HIGHLIGHTS

கோவை - அவிநாசி சாலையில் இடிக்கப்படும் நடைபாதை மேம்பாலம் ; கடும் போக்குவரத்து நெரிசல்
X

நடைபாதை மேம்பாலம் மூடப்பட்டதால் சாலையை கடந்து செல்லும் மாணவர்கள்

கோவை - அவினாசி ரோட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் என்ற நீண்ட தூர மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் 1,627 கோடி ரூபாய் செலவில் தொடங்கிய இந்த பணிகளுக்காக மேம்பால தூண்கள் மற்றும் இணைப்பு கர்டர்கள் அமைக்கும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. அண்ணா சிலை, நவ இந்தியா சந்திப்பு, ஹோப் காலேஜ், விமான நிலைய ரோடு சந்திப்பு பகுதியில் வாகனங்கள் ஏறி இறங்கும் வகையிலான ரேம்ப் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. மேம்பால பணிக்காக அவினாசி ரோட்டில் இரண்டு புறமும் பல்வேறு இடங்கள் கையகப்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. சர்வீஸ் ரோட்டிற்காகவும் அந்த சாலையில் இடம் தேவைப்படுகிறது. பெரிய கட்டிடங்கள் எதுவும் இடிக்கப்படமாட்டாது. ஆனால் காம்பவுண்ட் சுவர் மற்றும் கட்டிடங்களின் சிறு பகுதியை இடித்து நிலம் கையகப்படுத்தி அதற்கான பணிகளை தற்போது வேகமாக செய்து வருகிறார்கள்.

மாநில, நெடுஞ்சாலைத்துறை கட்டிடங்கள் இடிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக சுமார் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேம்பால பணிகள் இதுவரை 6 கிமீ தூரம் வரை முடிந்துள்ளது. இன்னும் 4 கிமீ தூரம் வரை இணைப்பு கான்கிரீட் தளம் அமைக்கப்பட வேண்டிய பணிகள் இருக்கிறது. காலை, மாலை, இரவு என பீக் அவர் நேரங்களில் வாகனங்களில் பணி நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். பணி நடக்கும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மேம்பால பணிக்காக பி எஸ் ஜி தொழில்நுட்பக்கல்லூரியின் மதில் சுவர் இடிக்கப்பட இருக்கிறது. மேலும் கல்லூரியையும், கல்லூரி விடுதியை இணைக்கும் நடைபாதை பாலமும் இந்த வாரத்திற்குள் இடிக்கப்பட இருக்கிறது. முதல்கட்டமாக, அவினாசி சாலையிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி முன்பு, புதிய சிக்னல் இன்று திறக்கப்பட்டதால் நடைபாதை பாலம் மூடப்பட்டது. விரைவில் பாலம் இடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் சாலையை கடந்து செல்ல வேண்டி இருப்பதால், அவினாசி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Updated On: 1 March 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?