/* */

தருமபுரி மக்களவைத் தொகுதி: ஒரு பார்வை

தமிழகத்தில் அதிகளவில் பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதிகளில் ஒன்று தருமபுரி. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரிதாக எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது

HIGHLIGHTS

தருமபுரி மக்களவைத் தொகுதி: ஒரு பார்வை
X

தருமபுரி மக்களவைத் தொகுதி (தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 10வது தொகுதி ஆகும்.

1977ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மேட்டூர் மக்களவைத் தொகுதியில் தருமபுரி இருந்தது. மறுசீரமைப்புக்கு பின்னர் தருமபுரி தொகுதியாக மாற்றப்பட்டது.

2008 ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பிறகு முன்பு இந்த மக்களவை தொகுதியில் அரூர் (தனி), மொரப்பூர், தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

மறுசீரமைக்கப்பட்ட பிறகு, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) மற்றும் மேட்டூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதுவரை தருமபுரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2, பாமக 4, அதிமுக 2, தமாகா 1, முறையும் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பாலும், அதிமுக மற்றும் திமுக உடன் பாமக கூட்டணி வைக்கும்போதெல்லாம் தருமபுரி பாமகவுக்கே ஒதுக்கப்படுவது குறிப்பிடதக்கது.

1999ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற பு.தா. இளங்கோவன், 2004ஆம் ஆண்டு பா.ம.க வேட்பாளர் ஆர்.செந்திலை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருக்கிறார்.

முந்தைய தேர்தல்களில் வென்றவர்கள்

1977 வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்)

1980 கே. அர்ஜுனன் (திமுக)

1989 எம். ஜி. சேகர் (அதிமுக)

1991 கே. வி. தங்கபாலு (காங்கிரஸ்)

1996 தீர்த்தராமன் ( தமாகா)

1998 பாரி மோகன் (பாமக)

1999 பு. த. இளங்கோவன் (பாமக)

2004 ஆர். செந்தில் (பாமக)

2009 இரா. தாமரைச்செல்வன் (திமுக)

2014 அன்புமணி ராமதாஸ் (பாமக)

2019 செந்தில்குமார் (திமுக)

தமிழகத்தில் அதிகளவில் பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதிகளில் ஒன்று தருமபுரி. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரிதாக எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இங்கு கேட்க முடிகிறது.

மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள தருமபுரியில் விவசாயத்தைத் தவிர, வேலை வாய்ப்புகளை தரும் தொழிற்சாலைகள் இல்லை. அதனால், தருமபுரியிலிருந்து அதிகளவில் வேறு பகுதிகளுக்கு வேலை வாய்ப்புகளை தேடி புலம்பெயர்வதாக கூறுகிறார்கள்

சிப்காட் தொழில்பேட்டை, நல்லம்பள்ளி அருகே ராணுவ தளவாட ஆராய்ச்சி மையம், பென்னாகரம் பருவதனஅள்ளி சிட்கோ, அரூர் சிட்கோ ஆகிய தொழில்பேட்டைகள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகள் பல ஆண்டுகளாக அறிவிப்புகளாகவே உள்ளன.

Updated On: 16 March 2024 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு