/* */

பழைய சாலையின் மீது புதிய சாலைஅமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

அரூர் அருகே பழைய சாலையை அகற்றாமல் அதன்மேல் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பணி நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பழைய சாலையின் மீது புதிய சாலைஅமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
X

அரூர் அருகே பழைய சாலை மேல் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தர்மபுரி-திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி-அரூர் (மொரப்பூர் வழி) சாலை வரை இருவழிப்பாதையிலிருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தானிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

113 கிலோ மீட்டர் தூரம் உள்ள தர்மபுரி-திருவண்ணாமலை சாலையில், தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்படுகிறது.

இதற்காக ஏற்கெனவே தர்மபுரி,கோபிநாதம்பட்டி, செம்மண்அள்ளி, மொரப்பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. இது 16.20 மீட்டர் அகலமுள்ள 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இச்சாலையில் தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலையில் 70 சிறுபாலங்கள் கட்டப்பட்டு சாலை அமைக்கும் முடிவடையும் நிலையில் உள்ளது.

நான்கு வழி சாலைகளை தரமான சாலையாக அமைக்க தமிழ்நாடு அரசு மூலமாக ஒப்பந்தங்கள் விடப்பட்டு எட்டு ஒப்பந்ததாரர்கள் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் பழைய தார்சாலையை அகற்றாமல் தார் கலவை கொட்டி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலையை தரமான சாலையாக இல்லாமல் சாலை சேதமடையும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் அரூர் அருகே உள்ள சேவா கிராம பகுதியில் பழைய சாலையை அகற்றாமல் பழைய சாலையின் மீது புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பழைய தார் சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலையை அமைக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்து வந்த அரூர் வட்டாட்சியர் பெருமாள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். மேலும் பழைய சாலையின்மீது புதிய சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

Updated On: 15 Oct 2023 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  2. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  3. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  5. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  6. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  9. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  10. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்