/* */

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் கொடைக்கானல் வருவதால் வாகன நெரிசல்..!

Kodaikanal Route Traffic Jam புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணிப்பதால் இப்போதிருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது.

HIGHLIGHTS

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் கொடைக்கானல் வருவதால்  வாகன நெரிசல்..!
X

புத்தாண்டையொட்டி  சுற்றுலாவுக்காக கொடைக்கானலுக்கு அனைவரும் பயணிக்க திட்டமிட்டதால்  கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Kodaikanal Route Traffic Jam

புத்தாண்டு கொண்டாடுவதற்காக சுற்றுலாப்பயணிகள் வருகை கொடைக்கானலுக்கு தற்போது அதிகரித்துள்ளது. வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் மேலும், அதிகளவில் குவிய உள்ளனர். இதன் முன்னோட்டமாக நேற்றிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை சீராக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வந்து குவியும் வாகனங்களால் மலைச்சாலைகள் நெரிசலில் திணறுகின்றன. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகள், சுற்றுலா இடங்கள் உள்ளிட்டவைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில், போலீசார் முன்னேற்பாடுகளை செய்து போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என, சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கில புத்தாண்டைக் கொண்டாட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொடைக்கானலுக்கு அதிகம் பேர் வருவதால், வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாம். ஆண்டுதோறும் புத்தாண்டை பொதுமக்கள் மிக உற்சாகத்துடன் கொண்டாடுவர் .இந்த ஆண்டைப் பொறுத்தவரை வாரவிடுமுறையையொட்டி திங்கட்கிழமை புத்தாண்டு பிறப்பதால் அன்றைய தினமும் அரசு விடுமுறை என்பதாலும் மேலும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையின் இறுதிநாள் என்பதாலும் இப்போதிருந்தே கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர் பலர்.

இதனால் எங்கு பார்த்தாலும் வாகனங்களாகவே காட்சியளிப்பதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போதே போலீசார் இதனைக் களைய திட்டமிடவிட்டால் நாட்கள் நெருங்க நெருங்க யாருமே கொடைக்கானலுக்கு வராத நிலை ஏற்பட்டுவிடும் ...முன்திட்டமிடலை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை நகரில் ,நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு மிக நேர்த்தியாக கொண்டாடப்படும் அத்துடன் சிறுவர்கள் கேக் வெட்டியும், புத்தாண்டு வரவேற்றும் பட்டாசுகள்வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவர். அதிகாலை ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும், கிறிஸ்தவ தேவாலயங்களில் ஜெபக் கூட்டம் நடைபெறும்.மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அரசு பல கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளதால் அதனை உரிய முறையில் அனைவரும் கடைப்பிடித்தாலே பிரச்னைகள் எதுவும் வராது.

Updated On: 30 Dec 2023 9:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு