முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன்  கோவில்களில்  கிருத்திகை  வழிபாடு
X
குமாரபாளையம் முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.

முருகன் கோவில்களில்

கிருத்திகை வழிபாடு

குமாரபாளையம் முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.

கிருத்திகை நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். அரோகரா என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர். இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

படவிளக்கம் :

கிருத்திகை நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் முருகன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Next Story
ai healthcare products