திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் கழிவுநீர் திட்டம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு நகராட்சி சூரியம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் கழிவுநீர் திட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
திருச்செங்கோடு நகராட்சி, சூரியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடை செய்யக்கோரி, திரளான பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு நகராட்சி சூரியம்பாளையம் பகுதியைச் சேரந்த, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
திருச்செங்கோடு தாலுகா, சூரியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் மயானத்திற்கு அருகில் பிற பகுதிகளில் இருந்து கழிவுநீர் வருவதை கண்டித்து எங்கள் ஊர் மக்கள் ஒன்று கூடி நகராட்சி கமிஷனரிடம் ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டோம். அது சம்மந்தமாக ஆர்டிஓ எங்களை விசாரணைக்கு அழைத்தார். விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே எஸ்டிபி திட்டம் என்ற பெயரில் கழிவுநீரை எங்கள் பகுதி நீர்நிலைக்கு அருகில் கொண்டு வருவது தொடர்பாக வரைபடத்தை எங்களிடம் கொடுத்து இத்திட்டம் தான் உங்கள் ஊரில் நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறினார்கள்.
இது சம்மந்தமாக ஊர்மக்கள் ஒன்று கூடி ஆலோசித்தோம், அதன் படி நகராட்சி கூறும் திட்டத்தால் எங்கள் பகுதி நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை மாசு அடையும். அதுமட்டுமின்றி சுகாதாரமும் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் இத்திட்டத்தை ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏக மனதாக ஏற்கவில்லை. அதனால் இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் நடைமுறை படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வீடுதோறும் கருப்புக் கொடி போராட்டத்தையும், ரேஷன் கார்டுகளை திருப்பி வழங்கும் போராட்டத்தையும் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu