30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி ரூ. 5,000 வரை தள்ளுபடி பெற நாமக்கல் மாநகராட்சி அழைப்பு

30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி ரூ. 5,000 வரை    தள்ளுபடி பெற நாமக்கல் மாநகராட்சி அழைப்பு
X

மகேஷ்வரி, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர்.

நாமக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும் 30ம் தேதி க்குள் செலுத்தி, 5 சதவீதம் முதல், அதிகபட்சம் ரூ. 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும் 30ம் தேதி க்குள் செலுத்தி, 5 சதவீதம் முதல், அதிகபட்சம் ரூ. 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஷ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 2025-26ம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும், 30ம் தேதி க்குள் செலுத்தினால், சொத்துவரியில் 5 சதவீதம் முதல், அதிகபட்சமாக ரூ. 5,000 வரை தள்ளுபடி பெற்று பயன்பெறலாம். மேலும், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும், 2025-26ம் நிதியாண்டில், முதலாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, வரும் 30க்குள்ளும், இரண்டாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, வரும், அக். 31க்கும் முன்பும் செலுத்தி, அபராதங்களை தவிர்த்து, அரசு வழங்கும் தள்ளுபடியான சொத்துவரியில் 5 சதவீதம் முதல், அதிகபட்டசம் ரூ. 5,000 வரை தள்ளுபடி பெற்று பயன் பெறலாம். மேற்குறிப்பிட்ட காலங்களில் செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி, மாநகராட்சிக்கு தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story