சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் நாட்டுச் சர்க்கரை மூட்டைக்கு ரூ.60 உயர்வு

நாட்டுச் சர்க்கரை.
சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் நாட்டுச் சர்க்கரை விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை விலை உயர்ந்தது.
ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள் (30 கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, நேற்று கூடிய மார்க்கெட்டில் நாட்டுச் சர்க்கரை 3,200 மூட்டையும், உருண்டை வெல்லம் 4,100 மூட்டையும், அச்சு வெல்லம் 320 மூட்டையும் வரத்தானது.
இதில், நாட்டுச் சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,220 முதல் ரூ.1,300 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,320 முதல் ரூ.1,370 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,280 முதல் ரூ.1,320 வரை என்ற விலையில் விற்பனையானது.
கடந்த வாரத்தை விட நாட்டுச் சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நாட்டுச் சர்க்கரை மட்டும் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு ரூ.60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அச்சு வெல்லம் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு ரூ.30 ரூபாய் வரை குறைந்துள்ளது.
மேலும், தீபாவளி வரவுள்ளதால், வரும் வாரங்களில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை விலை உயர வாய்ப்புள்ளதாக வெல்ல மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu