அந்தியூரில் ரூ.7.04 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூரில் ரூ.7.04 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7.04 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது.

அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7.04 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை (நேற்று) என்பதால் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு அந்தியூர், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, ஜரத்தல், ஒலகடம், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 ஆயிரத்து 220 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று 18 ரூபாய்க்கும், நேந்திரம் 22 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார் ஒன்று) ரூ.450-க்கும், செவ்வாழை ரூ.580-க்கும், தேன்வாழை ரூ.490-க்கும், மொந்தன் ரூ.340-க்கும், ராஸ்தாளி ரூ.420-க்கும், பச்சை வாழை ரூ.330-க்கும் என மொத்தம் வாழைப்பழத்தார் ரூ.7 லட்சத்து 4 ஆயிரத்து 300க்கு ஏலம் போனது.

இதில், ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், கோவை, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாழைப்பழத்தார்களை ஏலம் எடுத்து சென்றனர்.

Tags

Next Story
ai in future agriculture