/* */

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.5) இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 80.98 அடியாக சரிந்தது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக சரிவு
X

கழுகுப் பார்வையில் பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.5) இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 80.98 அடியாக சரிந்தது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை (டிச.5) இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 80.98 அடி ,

நீர் இருப்பு - 16.20 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 951 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,600 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்திற்காக 600 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 2,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 5 Dec 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?