பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.33 அடியாக உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.33 அடியாக உயர்வு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஜூன்.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 57.08 அடியிலிருந்து 57.33 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஜூன்.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 57.08 அடியிலிருந்து 57.33 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், இந்த அணை 3 மாவட்டங்களின் முக்கிய பாசன தேவையாகவும் திகழ்கிறது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

நேற்று (ஜூன்.12) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 978 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.13) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 793 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 155 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 57.08 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 57.33 அடியாக உயர்ந்தது. மேலும், அணையில் நீர்இருப்பு 6.42 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
smart agriculture iot ai