அத்தாணியில் ரூ.1.34 கோடியில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை

அத்தாணியில் ரூ.1.34 கோடியில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை
X

அத்தாணி காலனி பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் ரூ.1.34 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் ரூ.1.34 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பேரூராட்சி சார்பில் அத்தாணி காலனி பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.34 கோடி ரூபாய் மதிப்பீல் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடந்தது. அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்கி, பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார்.

பேரூராட்சி தலைவர் புனிதவள்ளி செந்தில்கணேஷ், செயல் அலுவலர் காசிலிங்கம், இளநிலை பொறியாளர் சம்பந்தமூர்த்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லோகநாதன், பேரூர் திமுக செயலாளர் செந்தில்கணேஷ், வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், மணி, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
smart agriculture iot ai