வருவாய்த்துறை அலுவலர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டம்
X

வருவாய்த்துறை அலுவலர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, அலுவலர் சங்க கூட்டமைப்பினர், நாமக்கல் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்தும், பணி பாதுகாப்பினை உறுதி செய்யக்கோரியும், கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

வருவாய்த்துறை அலுவலர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்தும், பணி பாதுகாப்பினை உறுதி செய்யக்கோரியும், கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் கடந்த 3ம் தேதி, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் திருமாறன் என்பவரை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் நரவலூர் விஏஓ ராமன் என்பவர் பணியில் இருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரால் தாக்கப்பட்டார். இதையொட்டி நடைபெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தின்போது, கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு அலுவலர்கள் தாக்கப்படும் சம்பவம் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வருவாய்த்துறை அலுவலர்கள் மீது அரசியல்வாதிகளால் தொடர் தாக்குதல் சம்பவங்க¬ள் நடைபெறுவதால் அவர்கள் பணி செய்ய முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இச்சம்பவங்களை கண்டித்தும், தனி நபர்களால் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, ஏற்கனவே அளிக்கப்பட்ட பணி பாதுகாப்பினை உறுதி செய்யக்கோரியும் அத்துமீறல்களும் தாக்குதல்களும் நடைபெறும்போது, கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை அறிவிக்க வேண்டியும், நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் இது குறித்த கோரிக்கை மனுவினை கலெக்டர் ஆபீசில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அளித்தனர்.

Next Story
smart agriculture iot ai