/* */

Collector Inspected At Research Centre காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

Collector Inspected At Research Centre ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உப்புப்பள்ளம் பகுதியில் செயல்படும் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (நேற்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

Collector Inspected  At Research Centre   காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி   நிலையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
X

சத்தியமங்கலம் அருகே பகுத்தம்பாளையத்தில் உள்ள காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

Collector Inspected At Research Centre

சத்தியமங்கலம் அருகே உப்புப்பள்ளம் பகுதியில் செயல்படும் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (நேற்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பகுத்தம்பாளையம், உப்புப்பள்ளம் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது ஆட்சியர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் நிதியுதவியுடன் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் சுமார் 164 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இதில் 25 ஏக்கர் பரப்பளவில் வேலி அமைத்து காங்கேயம் இன மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் காங்கேயம் மாடுகளுக்கான பசுந்தீவனம் பயிரிடப்பட்டு மாடுகளுக்கு அறுவடை செய்து வழங்கப்பட்டு வருகிறது.

2.5 ஏக்கர் நிலப்பரப்பு மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு காங்கேயம் இனத்தை சார்ந்த 44 எண்ணிக்கையிலான பசுமாடுகளும், 8 எண்ணிக்கையிலான காளைகளும், 13 எண்ணிக்கையிலான கிடாரி கன்றுகளும் மற்றும் 5 எண்ணிக்யிைலான காளை கன்றுகளும் என மொத்தம் 70 காங்கேயம் இன மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், காங்கேயம் மாட்டினம் மிகச்சிறந்த வேலைத்திறன் கொண்டவை ஆகும். இவை கடினமான தட்பவெட்பநிலை, நோய் எதிர்ப்புத்திறன், தாவரக்கழிவுகள் மற்றும் தரம் குறைந்த தீவனங்களை திறம்பட மாற்றுதல் மற்றும் வறட்சி ஆகியவற்றை தாக்குப்பிடிக்கும் திறம் கொண்டவை ஆகும்.


அதே போன்று, இவ்வாராய்ச்சி நிலையத்தில் காங்கேயம் மாட்டுப்பால், சிறுநீர், எரு மற்றும் பஞ்சகவ்யம் போன்றவை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும், காங்கேயம் மாடு வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் மற்றும் கண்டுநர் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, காங்கேயம் மாடுகளை வளர்க்கும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பண்ணைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வறட்சியைத் தாங்கி இனவிருத்தி செய்யும் தன்மை கொண்ட காங்கேயம் மாட்டினத்தை பாதுகாக்கும் பணியினையும் இந்த ஆராய்ச்சி நிலையம் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை சார்ந்த பட்ட மேற்படிப்பு மாணவர்கள் காங்கேயம் மாட்டினத்தை பற்றிய ஆராய்ச்சியினையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலைய பேராசிரியரும், தலைவருமான குமாரசாமி உடனிருந்தார்.

Updated On: 16 Nov 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்