ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 5ம் ஆண்டு விழா

கல்லூரி ஆண்டு விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நிர்வாகிகள்.
College Annual Day Celebration
ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது.
ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 5ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளரும் கல்லூரியின் தாளாளருமான சந்திரசேகர் தலைமை வகித்தார். வேளாளர் அறக்கட்டளையின் பொருளாளர் அருண் வாழ்த்திப் பேசினார். நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார் வரவேற்றார். முதல்வர் நல்லசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
எவர்லைப் சிபிசி தலைமைத் திறன் மேலாளர் ஜூலி கிருபாவதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் தமக்கான அரிய வாய்ப்புகளை உணர்ந்து பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும். தனித்திறன்களை கண்டறிந்து அதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். கைப்பேசி செயலிகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்றார்.
2023-24 ஆம் கல்வியாண்டில் ஒட்டுமொத்தமாக மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீதம் வகுப்புத் தேர்ச்சி பெற வைத்த பேராசிரியர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, குலசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவை, வணிகவியல் துறைத் தலைவர் அருள்ராஜ், கணினி அறிவியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu