நசியனூர் பெரிய மாரியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

Erode news, Erode news today- நசியனூர் பெரிய மாரியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
ஈரோட்டை அடுத்த நசியனூரில் வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் 23ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், மற்றும் எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் எம்பி சிவசாமி ,ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயரும் சூரியம்பாளையம் பகுதி அதிமுக செயலாளருமான பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் பூவேந்திரன், நசியனூர் நடராஜ் மற்றும் கொத்துக்காரர்கள் பொன்னுசாமி, நடராஜ் ,வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் காமராஜ் ,மகாலிங்கம், சிவபாக்கியம், அன்னக்கொடி ,கோமதி, நாகராஜ் ,கனகராஜ் ,ராசு தவமணி, டாக்டர் ரங்கசாமி கார்த்தி, சிதம்பரம், லோகநாதன், அய்யாசாமி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu