8 ந்தேதி அமைச்சர் உதயநிதி வருகை: ஈரோட்டில் நாளை திமுக செயற்குழு கூட்டம்

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Dmk Working Committee Meet
ஈரோட்டிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்து முன்னேற்பாடு தொடர்பாக திமுக செயற்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து அமைச்சரும், திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் முத்துசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மணல்மேட்டில் உள்ள திமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டுக்கு வரும் 8ம் தேதி வருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
எனவே, இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு கழக செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu