Erode District General body Meet ஈரோட்டில் கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பொதுக்கூட்டம்

ஈரோடு மாவட்ட கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
Erode District General body Meet
ஈரோடு மாவட்ட கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் 31வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். கடந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையை பொருளாளர் சின்னச்சாமி சமர்பித்தார். ஆண்டறிக்கையை உதவி தலைவர் முகமது ரபீக் வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் சிவசண்முகம் மற்றும் ஓய்வு பெற்ற கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் அழகேசன் ஆகியோர் பங்கேற்று தொழிலாளர்கள் சட்டம் பற்றி விளக்கம் அளித்தனர்.
சங்கத்தின் தீர்மானங்களை செயலாளர் பாலு என்ற தனபாலன் வாசித்தார். இதில், ஈரோடு சோலார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியினை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாநகராட்சி பகுதியில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து சீரமைத்து தர மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளையும் விரைந்து செயல்படுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் வழங்கும் காசோலை பணம் இல்லாமல் திரும்பினால், வங்கிகள் நமது நிறுவன கணக்கில் ரூ.300 பிடித்தம் செய்வதை அனைத்து வங்கியினரும் திரும்ப பெற இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர். கூட்டத்தின் முடிவில் உதவி தலைவர் சங்கர் நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu