வயிற்றில் பரவிய புற்றுநோய்க் கட்டிகளை அகற்றி ஈரோடு மருத்துவக் குழுவினர் சாதனை

Erode news- ஈரோடு சுதா கேன்சர் சென்டரில் விவசாயியின் வயித்தில் இருந்த புற்றுநோய் கட்டிகளை அகற்ற மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தபோது எடுத்த படம் (உள்படம் டாக்டர் சுகேஸ்வரன்).
Erode news, Erode news today- ஈரோட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு வயிற்றில் பரவிய புற்றுநோய்க் கட்டிகளை அகற்றி ஈரோடு மருத்துவக் குழுவினர் சாதனை படைத்து உள்ளனர்.
ஈரோட்டைச் சேர்ந்த 52 வயதான விவசாயி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. பின்னர், நலமாக இருந்த அவருக்கு மீண்டும் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத அவர் ஈரோட்டில் உள்ள சுதா கேன்சர் சென்டர் மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு டாக்டர் சுகேஸ்வரன் பரிசோதனை செய்த போது விவசாயிக்கு மீண்டும் புற்றுநோய் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால், சுதா கேன்சர் சென்டரில் இதற்கான நவீன சிகிச்சை அளிக்கும் தொழில் நுட்பங்கள் கொண்ட கருவி இருப்பதால், அதுகுறித்து எடுத்துக்கூறி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின்னர் விவசாயி வயிற்றில் பரவி இருந்த புற்றுநோய்க் கட்டிகள் முற்றிலும் அகற்றப்பட்டன. தற்போது அவர் நலமாக உள்ளார்.
இதுகுறித்து புற்றுநோய் நிபுணர் டாக்டர் சுகேஸ்வரன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் புற்றுநோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நேரம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருவதுடன், புற்றுநோய் சோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் தொழில் நுட்பமும் மேம்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட விவசாயி ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு ஒட்டுக்குடலில் புற்றுநோய் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று இருந்தார். ஆனால், முழு மையாக அவர் குணம் அடையாததால் புற்றுநோய் பாதிப்பு அவரது வயிற்றுக்குள் பரவி இருந்தது.
அவர் எங்கள் சுதா கேன்சர் சென்டருக்கு வந்தபோது முழுமையான பரிசோதனையை மேற்கொண்டோம். அப்போது புற்றுநோய் வயிற்றின் உள்ளே முழுமையாக பரவி இருந்தது தெரியவந்தது. எனவே 'ஹைபெக்' எனப்படும் நவீன சிகிச்சை அளிக்க வேண்டியது இருந்தது. இது வயிற்றுக்கு உள்ளே கொடுக்கப்படும் ஒரு ஹீமோதெரபி. இந்த சிகிச்சை அளித்தால், உள்ளே இருக்கும் புற்றுநோய் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.
'ஹைபெக்' சிகிச்சை குறித்து அவருக்கு விளக்கம் அளித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஈரோடு சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர் வழிகாட்டுதலுடன் எனது தலைமையில் (டாக்டர் சுகேஸ்வரன்). டாக்டர்கள் மணிகண்டன், நிர்மல் அரசு, மயக்கவியல் நிபுணர் டாக்டர் அமுதா மற்றும் மருத்துவக்குழுவினர் 12 மணிநேரம் சிகிச்சை அளித்து வயிற்றுக்குள் இருந்த புற்றுநோய் கட்டிகளை முழுமையாக அகற்றினோம். தற்போது அவர் நலமாக உள்ளார்.
இதுபோல் பெண்களுக்கான மார்பக புற்றுநோய், குடல்களில் ஏற்படும் புற்றுநோய்கள், பெண்களுக்கு சினைமுட்டையில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவற்றை முழுமையாக குணமாக்கும் 'ஹைபெக்' சிகிச்சை இப்போது ஈரோட்டிலேயே இருக்கிறது. மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த சிகிச்சை அளிக்கப்படுவதுடன், புற்றுநோய் முற்றிலும் குணமாக்கப்பட்டு தங்கள் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு டாக்டர் சுகேஸ்வரன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu