நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில்    மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டைக் காட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிரதீப்ராஜ் (17). இவர் எர்ணாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி, கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது மூத்த சகோதரரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். ஹாஸ்டலில் இருந்த தம்பியை காணவில்லை என அண்ணன் தேடிப்பார்த்தார். அப்போது, கல்லூரி ஹாஸ்டலின் 3வது மாடியில், தம்பி பிரதீப்ராஜ் தூக்கில் தொங்குவதைப் பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து, கல்லூரி நிர்வாகத்தினர் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார், தனியார் கல்லூரிக்கு சென்று மாணவர் பிரதீப்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
ai in future agriculture