நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு துவக்கம் 18,898 மாணவர்கள் பங்கேற்பு: 332 பேர் ஆப்சென்ட்

பைல் படம்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு துவக்கம்,
18,898 மாணவர்கள் பங்கேற்பு: 332 பேர் ஆப்சென்ட்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில், 86 மையங்களில் நடந்த பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வில், 18,898 மாணவர்கள் பங்கேற்றனர். 332 பேர் கலந்து கொள்ளவில்லை.
தமிழகம் முழுவதும், பிளஸ் -2 அரசு பொதுத்தேர்வு, கடந்த 3ம் தேதி தொடங்கியது. அதையடுத்து, பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கி, வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், 95 அரசுப்பள்ளி, 7 அரசு உதவிப்பெறும் பள்ளி, 4 பகுதி அரசு உதவிபெறும் பள்ளி, 92 தனியார் பள்ளிள் என மொத்தம், 198 பள்ளிகளைச் சேர்ந்த, 19,230 மாணவ, மாணவியர் பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 223 பேரில், 168 பேருக்கு, சொல்வதை எழுதும் உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிளஸ் 1 தேர்வுக்காக, 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 4 கூடுதல் துறை அலுவலர்கள், 200 பறக்கும் படை உறுப்பினர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் 1,260 அறைக்கண்காணிப்பாளர்கள், என மொத்தம் 1,663 பேர் தேர்வு கண்காணி“பபு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வில் 18,898 மாணவ மாணவியர் பங்கேற்றனர். 332 பேர் கலந்து கொள்ளவில்லை. அதில், பிரெஞ்ச் மொழி பாடத்தில், 21 பேரில், 6 பேர் தேர்வு எழுதினர். 15 பேர் ஆப்செண்ட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu