மே மாதத்திற்குள் மேல்நிலைப்பள்ளி எச்.எம் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங் நடத்திட வேண்டும் : முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

மே மாதத்திற்குள் மேல்நிலைப்பள்ளி எச்.எம் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங் நடத்திட வேண்டும் : முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை
X

நாமக்கல் ராமு, மாநில தலைவர், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

வரும் மே மாதத்திற்கும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங் நடத்தி முடிக்க வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல்,

வரும் மே மாதத்திற்கும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங் நடத்தி முடிக்க வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கான உள் மாவட்ட, வெளிமாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் இதனால் பலன் அடைந்தனர். இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் 2025& 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலை பள்ளிக்கல்வித்துறை விரைந்து தயாரிக்க வேண்டும். இதுகுறித்து, அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் உரிய செயல்முறைகளை அனுப்பி, மாநில அளவிலான பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பெயர்களை தொகுத்து, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான முன்னுரிமை பட்டியலை உடனடியாக தயாரிக்க வேண்டும்.

அதே சமயம், வருகிற கல்வி ஆண்டுக்கான மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை வரும் மே மாதத்திலேயே நடத்த வேண்டும். தொடர்ச்சியாக முதுகலை ஆசிரியர்களுக்கான உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வையும் மே மாதத்திற்குள் நடத்த வேண்டும். இதனால் வரும் கல்வியாண்டின் தொடக்க மாதமான ஜூன் முதல், மூத்த முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மூலமும், முதுகலை ஆசிரியர்கள் பணி மாறுதல் மூலமும், மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு மிகச் சிறப்பாக தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும். இதனால் கல்வி ஆண்டின் தொடக்க மாதம் முதலே மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் மேம்படும். எனவே மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story
smart agriculture iot ai