பஞ்., 'டிவி' அறை இடிப்பு சர்ச்சை

பஞ்., டிவி அறை இடிப்பு சர்ச்சை
X
வாட்ஸ்அப் தகவலுக்குப் பிறகு பஞ்., 'டிவி' அறை இடிப்பு விசாரணை தொடங்கியது

கொல்லிமலை யூனியன், சேலூர்நாடு, பள்ளக்குழிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் அன்புராஜன் (67) மற்றும் அவரது தம்பி அரசு பஸ் டிரைவர் மோகன் (53) ஆகியோர் பள்ளிக்குழிப்பட்டியில் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு இடையே சிதிலமடைந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான "டிவி" அறை உள்ளது, இது கடந்த காலங்களில் கிராம மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த மாதம், அன்புராஜ் வீட்டு வேலை செய்தபோது, இருவரின் வீடுகளுக்கும் இடையில் இருந்த பஞ்சாயத்து "டிவி" அறையை இடித்துள்ளனர், இதனால் கடந்த 31ம் தேதி இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் செம்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலூர் நாடு பஞ்சாயத்து "டிவி" அறையை அன்புராஜ் இடித்ததாக வாட்ஸாப்பில் நேற்று தகவல் பரவியதையடுத்து, வருவாய்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து தாசில்தார் சந்திரா, "பஞ்சாயத்து 'டிவி' அறையை இடித்ததாக தகவல் வந்துள்ளது, இதனால் அப்பகுதி வி.ஏ.ஓ.-வை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, அது உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Tags

Next Story