மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்விச்சுற்றுலா கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்விச்சுற்றுலா    கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
X

கல்விச்சுற்றுலா செல்லும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கலெக்டர் உமா வழியனுப்பி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளை கல்விச்சுற்றுலாவிற்கு கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளை கல்விச்சுற்றுலாவிற்கு கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனுடைய இளம் குழந்தைகளை, ஒருநாள் கல்விச் சுற்றுலாவிற்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் அறிவுசார் குறைபாடுடைய, புற உலகு சிந்தனையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும் 6 வயது வரையான இளம்சிறார்கள் மற்றும் அவர்களது, பெற்றோர், நர்சுகள், தசைப்பயிற்சி மற்றும் சிறப்பாசியர்களுடன் ஒரு நாள் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரச உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்டம், குரும்மம்பட்டி உயிரியல் பூங்காவிற்கு 25 மாற்றுத்திறன் குழந்தைகள் தனி பஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டனர். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கலெக்டர் உமா வழியனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story