ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா இலவச மருத்துவ முகாம்

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா இலவச மருத்துவ முகாம்
X

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், திமுக கட்சி சார்பிலும் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதி திமுக மற்றும் 23வது வட்டம் , நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் பகுதி செயலாளர் வி.சி. நடராஜன் தலைமையில் நடந்தது.

இம்முகாமிற்கு, மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். ஈரோடு தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சளி, காய்ச்சல்,சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம், குடல் புண், முதுகு தண்டு நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதி வட்ட நிர்வாகிகள் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க .நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture