/* */

பண்ணாரி அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த யானைக் கூட்டம்..!

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைக் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்தப்படி வேடிக்கை பார்த்தனர்.

HIGHLIGHTS

பண்ணாரி அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த யானைக் கூட்டம்..!
X

சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்.

பண்ணாரி அம்மன் கோவில் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைக் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்த படி வேடிக்கை பார்த்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக, தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுற்றித்திரிவதோடு அவ்வப்போது சாலையை கடந்து செல்வதும் வழக்கம். தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவ தொடங்கியுள்ளதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்றன.

இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டமாக தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது.

அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சாலையை கடந்து செல்வதைக் கண்டு வாகனங்களை நிறுத்தினர். தொடர்ந்து, யானைகள் சாலையை கடந்து செல்வதை கண்ட பொதுமக்கள் ரசித்த படி வேடிக்கை பார்த்தனர். மேலும், சாலையை கடந்து சென்ற காட்சியை வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

இதனையடுத்து, காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Updated On: 17 Feb 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு