நம்பியூர் அரசு கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை தொடக்க விழா

நம்பியூர் அரசு கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை தொடக்க விழா
X

Erode news- வணிக நிர்வாகவியல் துறை தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை தொடக்க விழா நடைபெற்றது.

Erode news, Erode news today- கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை தொடக்க விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே திட்டமலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையின் தொடக்க விழா கல்லூரியின் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நீதிபதி ரத்தினசாமி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு சம்பந்தமாக சிறப்புரை ஆற்றினார். விழாவில் துறை பேராசிரியர் பழனியம்மாள் வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் வருண் விக்னேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

விழாவில், துறையின் தலைவர் முனைவர் யூனஸ் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் நிகழ்ச்சிகளை மாணவிகள் ஸ்ரீஜா மற்றும் சுஷ்மிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். தொடர்ந்து, விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை நீதிபதி ரத்தினசாமி வழங்கினார். இவ்விழாவில், பிற துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வணிக நிர்வாகவியல் துறை முனைவர் வாணி நன்றி கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture