/* */

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2,200 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2,200 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் 2வது சுற்று தண்ணீர் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து திங்கட்கிழமை (பிப்.5) நேற்று காலை 8 மணி அளவில் வினாடிக்கு 1,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை (பிப்.6) இன்று காலை 8 மணி அளவில் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 2,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அப்போது அணைக்கு வினாடிக்கு 109 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 78.12 அடியாகவும், நீர் இருப்பு 14.71 டிஎம்சியாகவும் இருந்தது.

மேலும், அணையில் இருந்து அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Updated On: 6 Feb 2024 6:00 AM GMT

Related News