/* */

BHAVANISAGAR DAM UPDATE | பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 656 கன அடியாக சரிவு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து திங்கட்கிழமை (டிச.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி 656 கன அடியாக சரிந்தது.

HIGHLIGHTS

BHAVANISAGAR DAM UPDATE | பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 656 கன அடியாக சரிவு
X

Erode news- கழுகுப் பார்வையில் பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து திங்கட்கிழமை (டிச.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி 656 கன அடியாக சரிந்தது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

திங்கட்கிழமை (டிச.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 81.20 அடி ,

நீர் இருப்பு - 16.33 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 656 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,400 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,800 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்திற்காக 600 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 2,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 4 Dec 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  2. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  3. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  4. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  5. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!