ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

டாஸ்மாக் பார் (கோப்புப் படம்).
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் நடத்த நாளை (அக்.27) மதியம் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 183 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 81 கடைகளில் பார்கள் நடத்த இ-டெண்டர் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான ஆவணங்களை https://tntenders.gov.in/nicgep/app என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இ-டெண்டர் மூலம் விண்ணப்பிக்கும் போது மதுக்கூட உரிமையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தையும் டாஸ்மாக் நிறுவனம் தெளிவுபடுத்தும். நாளை மாலை 4.30 மணியளவில் டெண்டர் திறக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu