ஈரோட்டில் 21 ந்தேதி 3 கல்லூரிகளில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு.
Karunanidhi Centenary Seminar
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடந்து வருகிறது. பல இடங்களில் அவருக்கு சிலை வைக்கும் வேலைகளும் நடந்து முடிந்து சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் வியாழக்கிழமை 3 கல்லுாரிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு கருத்தரங்கு நடக்க உள்ளது.
ஈரோட்டில் 3 கல்லூரிகளில் நாளை கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடக்கிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சட்டப்பேரவை்து தலைவர் தலைமையில் சட்டப்பேரவை துணைத்தலைவர், கொறடா, எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட "சட்டமன்ற நாயகர்-கலைஞர்" என்ற விழாக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவின் சார்பில் "நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்துக்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பில் ஈரோட்டில் உள்ள 3 கல்லூரிகளில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கருத்தரங்கு நடக்கிறது.
அதன்படி ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் காலை 10 மணிக்கும், ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் மதியம் 12 மணிக்கும், வீரப்பன்சத்திரம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் 3 மணிக்கும் கருத்தரங்கு நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu