/* */

கொடுமுடி பகுதியில் பலத்த மழை; 10 மிமீ மழை பதிவு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் நேற்று 10.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொடுமுடி பகுதியில் பலத்த மழை; 10 மிமீ மழை பதிவு
X

மழை (கோப்புப் படம்).

கொடுமுடி பகுதியில் நேற்று 10.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், மழைப்பொழிவு காரணமாக கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொடுமுடி பகுதியில் 10.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 29 Oct 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...