ஈரோடு மாவட்டத்தில் தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடக்கம்

ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் தேசியக் கொடி விற்பனை தொடங்கியதை படத்தில் காணலாம்.
National Flag Sales
ஈரோடு மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.
இதுதொடர்பாக ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு.கருணாகர பாபு தெரிவித்துள்ளதாவது:-
நாட்டின் 75வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே பொதுமக்களுக்கு எளிதாக தேசியக் கொடி கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெறுகிறது.
அந்த வகையில், ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை தபால் நிலையங்களிலும் இந்திய தேசியக் கொடி விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூ.25 ஆகும். இதற்கு ஜிஎஸ்டி கிடையாது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் ரூ.25 செலுத்தி தேசியக் கொடியை பெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து குடியரசு தின விழாவை கொண்டாடலாம்.
மேலும், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மொத்தமாக தேசிய கொடியை வழங்க விரும்பினால், ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை தபால் நிலையங்களை தொடர்பு கொண்டு பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu