தென்னக காசி பைரவர் கோவிலில் நாட்டியாஞ்சலி பரதநாட்டிய அரங்கேற்றம்

பைரவர் சலங்கை பூஜை நாட்டியாஞ்சலி மற்றும் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.
தென்னக காசி பைரவர் கோவிலில் பைரவர் சலங்கை பூஜை நாட்டியாஞ்சலி மற்றும் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில் நேற்று கலையின் நாயகன் சிவபெருமானின் அவதாரமான பைரவருக்கு சலங்கை பூஜை தரிசனம் செய்யும் விதமாக பைரவ சலங்கை பூஜை நாட்டியாஞ்சலி மற்றும் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த சலங்கை பூஜை நாட்டியஞ்சலி அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு பைரவ பீடம் நிறுவனர் ஸ்ரீ விஜய் சுவாமிஜி தலைமை தாங்கினார்.
இதில் தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பைரவ சலங்கை பூஜை மற்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பரத நாட்டிய குரு சிலம்பு செல்வியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரத நாட்டிய மாணவி கள் பங்கேற்று நாட்டியம் ஆடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன்,ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu