ஈரோடு கூட்டுறவு சங்கங்களில் நாளை பண்ணைசாரா கடன் தீர்வு திட்ட முகாம்

ஈரோடு கூட்டுறவு சங்கங்களில் நாளை பண்ணைசாரா கடன் தீர்வு திட்ட முகாம்
X

கடன் தீர்வு திட்ட முகாம்.

Non-Farm Debt Settlement Project Camp ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம், நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

Non-Farm Debt Settlement Project Camp

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம், நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கி கடன்தாரர்களின் வட்டி சுமையை குறைக்கவும், கூட்டுறவு நிறுவனங்களில் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் நிலுவையுள்ள தவணை தவறிய கடன்களை வசூல் செய்து இந்நிறுவனங்களின் நிதிநிலையைப் பலப்படுத்தவும் சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வரும் சிறுவணிகக் கடன், தொழிற்கடன், வீட்டுவசதிக்கடன், சுயஉதவிக்குழுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைச்சாராக் கடன்களுக்கும், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் வேளாண் விளை பொருட்களை கொள்முதல், விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய இனங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

இச்சிறப்பு கடன் தீர்வுத் திட்டத்தின் பயனை கடன்தாரர்கள் முழுமையாக பெறும் நோக்கில் வருகிற மார்ச் 2ம் தேதி நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் அந்தந்த வங்கி, சங்க வளாகங்களில் நாளை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் பயனைப் பெற மார்ச் 13ம் தேதிக்குள் கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அரசின் சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story