/* */

தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி பண்டிகையையொட்டி, காவல்துறை சார்பில் ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்
X

ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம்.

தீபாவளி பண்டிகையையொட்டி, காவல்துறை சார்பில் ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள கடை வீதிகளில் புத்தாடைகள்-நகைகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை போன்ற பகுதிகளில் ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறி. திருட்டு சம்பவங்களில் திருடர்கள் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதால், இதனை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில், ஈரோடு மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அதன்படி, நடப்பாண்டு தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மணிக்கூண்டு பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் பேருந்து நிலையம், மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, ஆர்.கே.வி சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா உட்பட 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்ட உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் பணிக்கு நியமிக்க உள்ளனர் என்றனர்.

Updated On: 27 Oct 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  3. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  4. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  5. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  7. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  8. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  9. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  10. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!