நாமக்கல்லில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் முகாம்

நாமக்கல்லில் நாளை சுதந்திரப் போராட்ட    வீரர்கள் குறைதீர்க்கும் முகாம்
X

பைல் படம் 

நாமக்கல்லில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல்,

நாமக்கல்லில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள், மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 4ம் தேதி மாலை 3 மணிக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் நடைபெற உள்ளது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை நேரில் கேட்டறிய உள்ளார். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story