ராமானுஜர் 1007வது திரு அவதார தினம்: அந்தியூரில் ஒரே இடத்தில் 11 கருட சேவை

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பெருமாள் கருட சேவை நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டார்.
அந்தியூரில் ராமானுஜரின் 1007வது திரு அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில் 11 கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1007வது திரு அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில் 11 கருட சேவை நடைபெற்றது.
இதில் 11 கருட சேவைகளாக, அந்தியூர் கோட்டை ஸ்ரீ அழகராஜப் பெருமாள் அந்தியூர் திருப்பதி ஸ்ரீ பேட்டைப் பெருமாள், தவிட்டுப்பாளையம் வரம் தரும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தவிட்டுப்பாளையம் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், ஜி.எஸ். காலனி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மைலம்பாடி சுதர்சன மடம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள், புரசைக்காட்டூர் ஸ்ரீ கரியப்பெருமாள் பெருமுகைப்புதூர் ஸ்ரீ சஞ்சீவராயப் பெருமாள், பள்ளிபாளையம் ஸ்ரீ கோதண்டராமர், பிளிகிரி நாயக்கன்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, வெடிக்காரன்பாளையம் திருமன் கல்யாண லட்சுமி நாராயணப் பெருமாள் ஆகிய சுவாமிகள் கருட வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலாவாகக் கொண்டு செல்லப்பட்டன.
இந்த கருட வாகன வீதி உலாவானது, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தொடங்கி சத்தி ரோடு, சிங்கார வீதி, இராஜ வீதி, தேர் வீதி, பர்கூர் ரோடு வழியாகச் சென்று கோட்டை பெருமாள் கோவிலில் நிறைவடைந்தது. மேலும், 11 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர, ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்பதால் ஏராளமானோர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைக் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu