நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து நாமக்கல்லில் 25ம் தேதி இலவச பயிற்சி

பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நன்னீர் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சியில் மீன் பண்ணைக்குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக் குட்டை அமைக்கும் முறைகள், மீன்குஞ்சு தேர்வு மீன்வளர்ப்பு, உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள், மீன் தீவனம் தயாரிக்கும் முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானியத் திட்டங்கள், சந்தைப்படுத்துதல் முறைகள் பற்றியும் இப்பயிற்சியில் விரிவாக கற்றுத்தரப்படும். இதில் வேலையில்லாத பட்டதாரிகள், விவசாயிகள், இல்லத்தரசிகள், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் முதுநிலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.
விருப்பமுள்ளவர்கள் முன்பதிவுசெய்துகொள்ள 04286-&-266345, 266650, 7358594841 என்ற தொலைபேசி எண்களை தொடர்கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரி வழங்கப்படும் என்று வேளாண் அறிவியல் மைய தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu